மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய ஹசன் அலி - நிலத் தொடர்பு அற்ற தனி மாகாணம் கோரிக்கை- ஹசன் அலியின் அறிக்கை கண்டிக்கப் படவேண்டியது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் மேலும் இக் கோரிக்கை தெத்துக் கோடு போன்றது என்றும் வர்ணித்தார்
எவ்வாறு மர்ஹும் அஸ்ரப் இனவாதத்தை தூண்டி ஆட்சிக்கு வந்தாரோ அதே பல்லவியை ஹசன் அலி அவர்களும் மீண்டும் தூண்டுகிறார் நிலத் தொடர்பு அற்ற தனி மாகாணம் கோரிக்கை வைத்து. இங்கு ஹசன் அலி அறிய வேண்டும் மூவின மக்களும் வாழும் கிழக்கை தெத்துக் கோடு மாகாணமாக பிரிப்பது எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பது போன்றது.
நான் இங்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் முஸ்லிம் காங்கிரசும், ஹசன் அலியும் ஒன்றை உணரவேண்டும் இன்னும் முப்பது வருடத்துக்கு மேலான பழைய பல்லவியான மர்ஹும் அஸ்ரப்பின் கொள்கை பற்றிய கோசத்தை எழுப்புவது இக் காலத்துக்கு ஒவ்வாது . தற்போது நவீன காலம் முன்பு போன்று மக்களை ஏமாற்ற முடியாது .மக்கள் கல்வி வளம் பெற்று செழித்து கொழிக்கும் காலம் இது .
தற்போதுள்ள அரசியல் கள நிலை மிக சிக்கல் உடையது ,இலங்கையின் மூவின மக்களின் அறிவு வளர்ச்சி வான உச்சியை எட்டுகிறது , செய்தித் துறை மின்னல் வேகத்தில் செயல் படுகிறது. இக் காலத்தில் மர்ஹும் அஸ்ரபின் கொள்கைகள் தாக்குப் பிடிக்காது .மாற்றம் வேண்டும் .தற்போது மர்ஹும் அஸ்ரபை விட பன் மடங்கு சிந்தனை வாதிகளும் , செயல் திறன் மிக்கவர்களும் முஸ்லிம் சமூகத்தில் ஏராளம் .அவர்களை நீங்கள் இனம் கான வேண்டும்.
இவர்களின் கேள்விக் கணைகளுக்கு உங்களைப் போன்ற பழைய அரசியல் வாதிகளால் தாக்குப் பிடிக்க முடியாது .என்பது நாடு அறியும். எமக்குத் தேவை மூவின மக்களும் சேர்ந்து வாழும் கிழக்கு தனி மாகாணம் ,அதுக்குள் நம்மால் புள்ளிப் பிங்கான் விளையாட்டு விளையாட முடியாது
எனவேதான் பழைய கொள்கைகளும் , சிந்தனைகளும் மூட்டை கட்டி வைத்து விட்டு இளைஜர் சமூகத்துக்கு இடம் அளித்து நீங்கள் ஒதுங்குவதுதான் நமது சமூகத்துக்கு நலம் என்பதுதான் என் கருத்து என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்
0 Comments