Advertisement

Main Ad

அபிவிருத்தி வேலைகள் பாகுபாடு அற்ற நிலையில் முன்னெடுக்கப்படும் - அமைச்சர் திகாம்பரம்

எவர் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. எனது அமைச்சின் ஊடாக செய்யப்படும் அபிவிருத்தி வேலைகள் பாகுபாடு அற்ற நிலையில் முன்னெடுக்கப்படுவதே எனது இலக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார்.


செனன் வெளிஓயா தோட்ட வீதிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்…

மலையக தொழிலாளர்களின் புதிய கிராம பகுதி வாழ்க்கைக்கு வரவு செலவு நிதி ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தையும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி செயலாக்கும்.

நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேசத்தில் முதன்முறையாக புதிய கிராமங்கள் அமைக்கப்படும். இதில் கலாச்சார மண்டபம், விளையாட்டு மைதானம் உள்ளடங்களாக உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு இக்கிராமம் அமைக்கப்படும்.  

நுவரெலியா மாவட்டத்தில் 16 கிராம பகுதிகளில் மக்கள் பாவனைக்குதவாத வீதிகள் இனங்காணப்பட்டுள்ளது. இவைகளை காபட் செப்பணிடும் முதற்கட்ட பணிக்கான அடிக்கல் இன்று நாட்டப்படுகிறது.

ஓர்இரு நாட்களில் வீதிகள் செப்பணிடப்படும் என நினைத்துவிட கூடாது. இன்று நற்று நாளை பிடுங்கும் விவசாயம் போல் எண்ணிவிட கூடாது. பொறுமை காக்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த செப்பணிடும் வேலை நடந்தேரும்.

இன்று கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலையக புதிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் மாற்று கட்சிகாரர்கள் மக்களை திசைத்திருப்ப முனைவதை ஏற்றுக்கொள்ளாது அணைவரும் ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

பதுளை, இரத்தினபுரி, கண்டி, தெனியாய போன்ற தொழிலாளர்கள் வாழும் பிரதேசத்திலும் தமிழ் முற்போக்கு கூட்டணியினூடாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்.
பதுளையில் எனது அமைச்சின் ஊடாக எந்த அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படாது என மாற்று கட்சிகாரர்கள் கூறியுள்ளார்கலாம். ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு இலட்த்திற்கு அதிகமான வாக்குகளை செலுத்தி என்னை புதிய அமைச்சராக பதிவு ஏற்க செய்துள்ளனர். ஆகையினால் நுவரெலியா மாவட்டத்தில் எனது முதற்கட்ட பணியை ஆரம்பித்த பின் ஏனைய மாவட்டங்களுக்கு 5 வருட காலப்பகுதிக்குள் சேவைகள் முன்னெடுக்கப்பேன்.

இன்று தலைத்தூக்கி உள்ள ஆயிரம் ரூபா சம்பளம் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி உள்ளது. தேர்தல் காலத்தில் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்று தருவதாக கூறிய தொழிற்சங்கங்கள் இப்போது காணாமல் போயுள்ளார்கள்.

ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் மாற்று வழி கையாளப்படும் என தெரிவித்த அவர் 3500 ரூபா தீபாவளி முற்பணம் திறைசேரியின் ஊடாக வட்டி இல்லா கடனாகவே தொழிலாளர்களுக்கு கிடைக்கவுள்ளது என்பதை தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஊடாக பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி வளர்ச்சிக்கென கூடுதலான நிதிகள் ஒதக்கப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும். அதேவேளை நுவரெலியா மாவட்டத்திற்கு கூடுதலான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்றார்.