(எஸ்.அஷ்ரப்கான், ஹாஸீப் யாசீன்)
உள்ளுர் ஆடை உற்பத்தியை அதிகரிப்பதுடன் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி அவர்களின்வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது உடையார் வீதியில் எக்ஸ்போ ஆடை நிறுவனம் இன்று (10)வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்போ ஆடை நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ.சஜானா ஜஹான் தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழாநிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.உசைனா, நிதி உதவியாளர்ஏ.சீ.முஹம்மட், நிறுவனத்தின் ஆலோசகர் ஏ.எம்.ஜஹான், வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது எக்ஸ்போ நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நிறுவன பணிப்பாளரினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது