Advertisement

Main Ad

இது அரசியல்வாதிகளின் வழமை போன்ற வெறும் அறிக்கையாக இருக்கக் கூடாது..

மட்டக்களப்பு பொத்துவில் வரையான புகையிரதப் பாதை அமைப்பதற்கான  அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையின் அனுமதிக்காகசமர்ப்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். இது அரசியல்வாதிகளின் வழமை போன்ற வெறும் அறிக்கையாக இருக்கக் கூடாது எனவும் மக்களுக்காக இச்சேவை உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக முதலில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டவந்த அமைப்பென்ற வகையில் சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றத்தின் தலைவர் மேலும் குறிப்பிடும்போது,



கிழக்கு மாகாண மக்களினால் பல தசாப்தங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் மட்டக்களப்புபொத்துவில்வரையான புகையிரத சேவையும் மிகவும் முக்கியமானதொன்றாகும்அமரர் ரணசிங்ஹ  பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக இருந்தகாலப்பகுதியில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த .ஆர்மன்சூர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஈரான் அரசினால்மட்டக்களப்புபொத்துவில் வரையான வரைபடம் தயாரிக்கப்பட்டு, அதனை அமைப்பதற்கான ற்பாடுகள் அப்போது செய்யப்பட்டிருந்தனஆனால்திடீரென ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் பல வருடங்களாக நாட்டை அச்சுறுத்திய யுத்தமும் இவ்வபிவிருத்திக்கு தடையாக இருந்தன.  இதனால்இவ்விடயம் கைவிடப்பட்டது இதுவே ஆரம்ப வரலாறாகும்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன்  பின்னர் எமது சாய்ந்தமருது சுபீட்சம் நட்பணி மன்றத்தினால் 2014.08.07 ஆம் திகதி முன்னாள்ஜனாதிபதிக்கு இவ்விடயமாக மகஜர் ஒன்றினையும் அனுப்பியிருந்தோம்.  பதில் வந்ததுஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  2015 ஜனவரியில் நல்லாட்சி மலர்ந்ததன் பிற்பாடு 2015.09.07 ஆம் திகதி மட்டக்களப்புபொத்துவில் புகையிரத சேவையினை முதற்கட்டமாகமட்டக்களப்பு ஒலுவில் வரையாவது ஆரம்பிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டுமென ஆலோசனை ஒன்றினை முன்வைத்து எமதுஅமைப்பினால் ஜனாதிபதிபிரதமர்போக்குவரத்து அமைச்சர் ஆகியோர்களுக்கு மகஜர்களை அனுப்பியிருந்ததுடன், அதன் பிரதிகளை கட்சிபேதமின்றி அம்பாரைமட்டக்களப்பு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள்பிரதி அமைச்சர்கள்பாராளுமன்றஉறுப்பினர்களுக்கும் அனுப்பியிருந்தோம்.

அதன் விளைவாக  பிரதமர் அலுவலகத்தினால் 2015.11.16 ஆம் திகதியின் இலக்கம் பி.எம்./2015/4 கடிதத்தின் பிரகாரம் இவ்விடயமாக நடவடிக்கைஎடுக்கும்படி போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததுபோக்குவரத்து அமைச்சில் புகையிரத நிருவாகநடவடிக்கைக்கான உதவிச் செயலாளர் ஆர்..கேரேனுகாவினால் 2015.11.20 ஆம் திகதியின் இலக்கம் எம்.ரீ/03/21/24 கடிதமூலம் புகையிரதமுகாமையாளரின் சாத்திய அறிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விடயம் இவ்வாறு இருக்கையில் இவ்விடயமாக மு.கா தலைவர் றவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் புகையிரத் பாதைஅபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளவுள்ளதாக பிரதேச அரசியல்வாதியான பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் 2015.10.12 ஆம் திகதியின் இலக்கம் கே.எம்/டி.எம்.எஸ்/இபி/ஆர்பி/2015/304 கடிதம் மூலம் எமது அமைப்பிற்குதெரிவிக்கப்பட்டதுஅதேபோல் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்அமீர் அலி அவர்களினால் முதல் கட்டமாகமட்டக்களப்பு-ஒலுவில் வரை  புகையிரத் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு 2015.11. 18 ஆம் திகதியின் இலக்கம டிஎம்/ஆர்இஏ/ கேஏ/02 கடிதமூலம் கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.

மட்டக்களப்பு பொத்துவில் வரையான புகையிரதப் பாதை அமைப்பதற்கான  அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரைவையின் அனுமதிக்காகசமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களினுடாக அறியக் கிடைக்கிறதுஜனாதிபதிபிரதமர்போக்குவரத்து அமைச்சர் உட்பட இவ்விடயமாக மிகவும்கரிசனையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் சுபீட்சம் நற்பணி மன்றம் பிரதேச பொதுமக்களின் சார்பில் நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றதுஅத்துடன் மட்டக்களப்பு-பொத்துவில் புகையிரதப் பாதை அபிவிருத்தித் திட்டத்திற்கான அமைச்சரைவை அனுமதிகிடைத்தவுடன், இத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுமென வழமைபோன்று ஊடக  அறிக்கைகளோடு  மட்டும் நின்றுவிடாமல் இவ்விடயமாகமுன்னாள் அமைச்சர் .ஆர்மன்சூர் செயற்பட்டதைப்போல் அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் தமிழ் பேசும் அரசியல்தலைவர்களும் முழுப் பங்களிப்பினையும் வழங்கி மக்களின் நீண்டநாள் தேவையினை பூர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைஎடுக்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது