Advertisement

Main Ad

சீருடை வவுச்சர்களின் பெறுமதி விவரம்

பாடசாலைச் சீருடைக்குப் பதிலாக, 2016ஆம் ஆண்டு முதல் வவுச்சர் வழங்கும் திட்டத்தைக் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. 



இந்த வவுச்சர்களை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த வவுச்சர்கள் வகுப்பாசிரியரால் ஆவணப்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு அல்லது பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்கு பெற்றுக்கொடுக்கப்படும். 

பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்கு கொடுத்தால் அவர்களின் அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டு கையொப்பம் பெற்றுக் கொள்ளப்படும். 1 தொடக்கம் 5 வரையான தர மாணவர்களுக்கான வவுச்சர் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமே வழங்கப்படும்.  

இதேவேளை, ஏதேனுமொரு வவுச்சர் தொடர்பாக விற்பனையாளர்களுக்கு உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தனது தொலைபேசி வாயிலாக 0714390000 எனும் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி உறுதிசெய்து கொள்ளும் வாய்ப்பிருக்கின்றது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.