Advertisement

Main Ad

சென்னையை முடக்கிய வெள்ளம்: தமிழக அரசையும் மிஞ்சிவிட்ட முஸ்லிம்களின் மனிதாபிமான நடவடிக்கை

சென்னையை முடக்கிய வெள்ளம்: தமிழக அரசையும் மிஞ்சிவிட்ட முஸ்லிம்களின் மனிதாபிமான நடவடிக்கை

கடந்த சில நாட்களாக இந்நியாவில் பெய்தும் வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாநகரங்களை சுருட்டிப் போட்டது வெள்ளம். இது இன்னொரு சுனாமியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது தமிழ், முஸ்லிம் என்றும் ஏழை பணக்காரன் என்றும் தராதரம் பார்க்கமால் சுருட்டிக்கொண்டது. சுனாமி ஏற்பட்ட போது இலங்கையில் மாத்திரமின்றி, வெளிநாடுகளிலும் இனம், மதம், பிரதேசவாதம் என்பவற்றுக்கு அப்பால் எல்லோரும் ஒருமித்து உதவிக்கரம் நீட்டியிருந்தனர்.



அதுபோல ஒரு சம்பவத்தை மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறது சென்னையில் ஏற்பட்ட வெள்ளம். வரும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு இந்தியாவில் பெய்த கடும் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தினால் மூழ்கிப் போயிருந்ததுடன், மக்களின் இயழ்பு வாழ்க்கை, நிர்வாக நடவடிக்கைகள் முடக்கம், தரை மற்றும் ஆகாய போக்குவரத்துக்கு தடை என குறையில்லாமல் சென்னை மாநகரமே முடங்கிப் போயிருந்தன.

இந்த வெள்ளத்தினால் சுமார் 50 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 இலட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெள்ளம் ஏழை, பணக்காரன் என்ற எதுவிதமான வித்தியாசங்கமின்றி, எல்லோரையும் பாதிப்படையச் செய்து பல நாடுகளின் கவனங்களையும் ஈர்த்துக் கொண்டுள்ளது.

தமிழக அரசையும் மிஞ்சிவிட்ட முஸ்லிம்களின் மனிதாபிமான நடவடிக்கை
குறித்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துகொடுப்பதற்கு இந்தியாவிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களும், முஸ்லிம் இளைஞர்களும் தஙகளால் என்ன செய்ய முடியுமோ அவ்வாறான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்திய முஸ்லிம்களின் ஒத்துழைப்புகள் அந்த நாட்டில் மாத்திரமின்றி, வெளிநாடுகளிலும் உள்ள சகல மக்களின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது.

முஸ்லிம்கள் தொடர்பாக கடுமையாக விமர்ச்சித்தவர்கள் இன்று சென்னையிலுள்ள தமிழ் மக்களை திரும்பிக்கூட பார்க்காத நிலையில் இன்று முஸ்லிம் மக்கள் எமது மக்ளுக்கு ஆற்றிவரும் பணிகள் அளப்பறியது. தமிழக அரசை விட முஸ்லிம்களே அதிக உதவிகளைச் செய்து வருவதாக தமிழ் நண்பர் ஒருவர் தன்னுடைய முகநூலில் பதிவேற்றம் ஒன்றைச் செய்திருந்தார்.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை தமிழக மக்களுக்கு முஸ்லிம் அமைப்புக்களும், இளைஞர்களும் ஆற்றிவரும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

‘மனிதன் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்’என அல்குர்ஆன் வசனமொன்று இருக்கிறது.

முஸ்லிம்கள் யாருடைய பாராட்டுக்களையும் எதிர்பார்த்து இவ்வாறான மனிதாபிமான நடவடிக்கைகளை செய்வதில்லை என்பதை முஸ்லிம்கள் மீதான தவநான கருத்துக்கள் மற்றும் பார்வை வைத்துள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றதும், தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்துள்ளமையும், இதனால் முஸ்லிம்கள் பற்றி தப்பான எண்ணங்கள் களையப்பட்டுள்ளமைக்கும் பல உணர்வுபூர்வமான சம்பவங்கள் காணப்படுகின்றன.

ஆதற்கு இந்த சம்பவர் ஒரு உதாரணமாகும். சென்னை ஊர்ப்பாக்கம் வெள்ளத்தினால் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சென்னை கிரசன்ட் கல்லூரியின் முன்னாள் மாணவர் யூனுஸ் அங்க வெள்ளத்தினால் சிக்கித் தத்தளித்துக்கொண்டிருந்த கர்ப்பிணித் தாயொருவரையும், அவரது கணவரையும் படகு மூலம் அழைத்து சென்று பாதுகாப்பானதொரு இடத்தில் தங்க வைத்துள்ளார்.

இவ்வாறு தனது மனைவி மற்றும் குழந்தையைப் பாதுகாத்த குறித்த கர்;ப்பினித்தாயின் கணவர் முஹம்மது யூனுஸ் எனும் இளைஞனுக்கு நன்றியை நினைவுகூறும் வகையில் குறுஞ்செய்தியொன்றை வாட்ஸ்ஸப் மூலம்அனுப்பி வைத்துள்ளார்.

“சேர் நான் மோகன். எனது மனைவி சித்ரா இன்று நல்ல முறையில் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். எனது பிள்ளைக்கு ‘யூனுஸ்’என்றே பெயர் வைத்திருக்கிறோம். படகில் எங்களை அழைத்து வரும் போது பணத்தின் பெறுமதி குறித்து எமக்கு நீங்கள் கொடுத்த ஆலோசனைக்கமைய எனது வருமானத்தில் 50வீதத்தை ஏழைகளுக்கும், விஷேட தேவையுடையவர்களுக்கும் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன். நீங்கள் எனது மகளை பார்ப்பதற்கு கட்டாயம் வரவேண்டும்” என அவர் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆத்துடன், சென்னை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முஸ்லிம்கள் மனப்பூர்வமான உதவிகளைச் செய்து வருகிறார்கள். இதைவிட நல்லிணக்கம் எங்கிருக்கிறது. இவர்களின் பணியைப் பார்க்கையில் மெய்சிலிர்க்கிறது. இந்த சமயத்தில் முன்னெடுக்கும் இந்த உதவிகள் மறக்க முடியாது. ஆவர்களுக்கு எல்லாம் கிடைக்க அல்லாஹ்வை பிரார்த்திப்பதாக இந்து மதகுரு (ஐயர்) ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வளைத்தளங்களில் வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, சென்னை வெள்ளம் அந்hட்டு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அவர்களின் உருக்கமான பேச்சுக்களில் இருந்து தெரியவருகிறது.

அத்துடன் முஸ்லிம்களின் செயற்பாடுகளைப் பார்த்து அல்லாஹ் நாடினால் தான் இஸ்லாத்திற்கும் வர விருப்பம் தெரிவிப்பதாகவும் மற்றுமொருவர் சமூக வளைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளமையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இழப்பீடும், நிவாரணப்பணிகளும் இதேவேளை, வெள்ளத்தினால் இதுவரை 15ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக‘அசோசாம்’ எனப்படும் இந்திய வர்ததகக் கூட்டமைப்ப செய்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டள்ளது.

ஆத்துடன், தமிழக அரசுக்கு மத்திய மாநிலங்கள் மற்றும் சர்வதேச நாடுகளும், இந்pதய திரைப்பட நடிகர்;கள், தயாரிப்பாளர்களும் தமது உதவிக்கரங்களை நீட்டியுள்ளன.

ஆத்தோடு, தமிழக மக்களுக்காக இலங்கையில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நகர்பகுதி மக்களுக்கு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்காக இலங்கையில் நிவாரண சேகரிப்புப் பணிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆத்துடன், இலங்கை கிரிக்கட் வீரர்களான குமார் சங்ககாரா, முத்தையா முரளிதரன், மஹேல ஜயவர்தன ஆகியோரும் தமது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பொருட்டு பல இலட்சம் ரூபா பணம் மற்றும் அத்தியாவசிப் பொருட்கள், ஆடைகள் என குறையில்லாம் தமிழகத்திற்கு உதவிகளாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இப்படியிருக்கையில் குறித்த நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதுதான் முக்கியமான விடயமாக இருக்கிறது. இதில் எதுவித மோசடிகளும் இடம்பெறக்கூடாது என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

ஆத்துடன், சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், இயற்கையின் சீறற்த்துடன் கோபித்துக் கொள்வதை விட்டு திட்டமிட்ட முறையில் நகர மயமாக்களை செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

சுகாதார சீர்கேடு வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை மற்றும் கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் உடனடியாக ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பை கூழங்களை துப்பரவு செய்து தருமாறும் மக்கள் தமிழக அரசை கேட்டுள்ளது.

அத்துடன், வெள்ளம் காரணமாக ஆங்காங்கே மலைபோல தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு தமிழக தௌஹித் ஜமாஅத் சென்னை மாநகராட்சியிடம் வேண்டுகோள் விடுத்து.

அப்படி உங்களால் செய்யாவிட்டால் ஜே.சீ.பி உள்ளிட்ட வாகனங்களை கொடுத்தால் நாம் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தமிழக தௌஹீத் ஜமாஅத் கேட்டுள்ளது.

தமிழகத்தில் வெள்ளம் தற்போது வழிந்தோட ஆரம்பித்திருக்கிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இன்னும் மூன்று நாட்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும் என சென்னை காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு சீரற்ற காலநிலையால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டு விடுமோ என்கின்ற அச்சம் தமிழக மக்கள் மத்தியில் காணப்பட்டு வருகின்றது.
எனவே, தமிழக மக்களுக்காக முடியுமானவர்கள் பணம், பொருள் உள்ளிட்ட உதவிகளைச் செய்யவும், ஏனையவர்கள் அந்த மக்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதையும் தவிர எங்களால் வேறு என்ன செய்ய முடியும்.

அத்துடன். இந்த வெள்ள அனர்த்தம் தமிழகத்திலுள்ள தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்திருப்பதுடன், இலங்கை போன்ற நாடுகளில் வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களுடனும் புரிந்துணர்வை ஏற்படுத்துகின்ற ஒரு படிப்பிணைகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் இலங்கையில் வாழும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டதைப் போல இலங்கையில் வாழும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்படாத வரை எந்த திட்டங்களும் சாத்தியப்படாது.