நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 03.12.2015 அன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே ஆரம்பத்தில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 03.12.2015 அன்று காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
முழு வைத்தியசாலையும் பணிபகிஸ்கரிப்பில் இருந்த வேளையில் விசேட சிகிச்சை பிரிவு மட்டும் வழமையாக நடைபெறுவதை காணக்கூடியதாக இருந்தது.