- றிஷாட் எம் புகாரி-
அன்மையில் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு சம்மாந்துறை எல்லையில் மின்சார வேலிகள் அமைக்க நினைத்தவர்கள் சிந்திக்கத் தவறிய சதி முயற்சி
30ஆண்டு யுத்த முடிவின் பின்னரும் அரசியலுக்கு அப்பால் சிறுபான்மையினரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கும் சிங்கள மேலாதிக்க சதிவலைக்குள் சம்மாந்துறையையும் சிக்கவைக்க சிலரின் தூரநோக்கற்ற திட்டமிடல்களும் அஸ்த்திவாரமும் இடப்படுகின்றது
குறிப்பாக வடகிழக்கில் சிறுபான்மையினரின் ஜனப்பரம்பலைக் கட்டுப்படுத்த ஆயிதத்தினால் முடியாத அரசு தனது நவின தந்திரயுபாயத்தினால் சம்மாந்துறையையும் அகப்படுத்தும் அரசுக்கு எமதூர் அதிகாரம் பெற்றவர்கள் துணைபோவது முட்டாள்தனமாகும்
குறிப்பாக மக்களின் வாழ்விட எல்லைகளுக்குள் வன விலங்குகளை ஊடுருவச் செய்வதும்
அதனால் வரும் தீங்குத் தவிர்ப்பு நிவாரணமாக மின்சார வேலிகளை அமைத்து அந்த வேலிகளுக்குள் மக்கள் பரம்பலை முடக்கி அந்த வேலிகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளை இயல்பாகவே வன விலங்குகள் சரணாலயங்களாக பிரகடனப்படுத்துவதன் மூலம் மக்களின் பரம்பலைக் கட்டுப்படுத்தி அவர்களைத் திறந்த வெளியில் வேலிச் சிறைக்குள் தள்ளும் பேரினவாதச் சதித் திட்டத்தின் அங்கமாக சம்மாந்துறையில் காட்டு யானைகளின் தொல்லையும் அதற்கான மின்சார வேலி அமைக்கும் தந்திர மாயையும் அமைந்திருப்பதைக் காணலாம்.
ஐயாமாரே!
சம்மாந்துறை ஒரு யானைகள் சரணாலயமோ அல்லது அவற்றின் மேய்ச்சல் நிலமோ (corridor) அல்லது அவை இரண்டையும் அண்டிய ஒரு பிரதேசமோ அல்ல
இது வசிப்பிடங்களையும் விவசாய நிலங்களையும் உள்ளடக்கி அம்பாரை இறக்காம், அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை, நிந்தவூர், கல்முனை நாவிதன்வெளி
போன்ற பிரதேசங்களின் மத்தியில் அமைந்துள்ள #மானுடவாழ்விடமாகும்.
போன்ற பிரதேசங்களின் மத்தியில் அமைந்துள்ள #மானுடவாழ்விடமாகும்.
எனவே இங்கு காட்டு யானைகளின் தொல்லை என்றால் அவற்றை வனங்களை நோக்கி சாய்ப்பதுடன் மீண்டும் அவை வனத்தையோ அல்லது அதனை அண்டிய பகுதியையோ விட்டு வெளியேறாமல் வனப்பகுதிகளில் தடைகளை ஏற்படுத்த வேண்டுமே தவிர
சம்மாந்துறையின் எல்லைப் பகுதியில் மின்சார வேலி அமைத்து எதிர்காலத்தில் மக்கள் பரம்பலுக்கு வேலிபோடும் பேரினவாத வேலைத்திட்டத்துக்கு துனைபோகவா உங்களிடம் அரசியல் அதிகாரம் வழங்கினோம் என்பதை சற்று சிந்தியுங்கள்
யானைகளின் பாதுகாப்பிற்காக யால, குமன மற்றும் வில்பத்து போன்ற சரணாலயங்கள் பிரகடனப்படுத்தப்படிருப்பதால் வன யானைகளை அங்கேயே சாய்த்து மேய்க்கவும் பாதுகாக்கவும் வேண்டும்
அத்துடன் இலங்கையில் யானைகளைப் பாதுகாப்பதற்காகவே "கஜமிதுறோ" என்ற அமைப்பும் காணப்படுகின்றது எனவே அவர்களைக் கொண்டு யானைகளை உரிய இடத்தில் மேய்க்க பாதுகாக்க உத்தரவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்
மேலும் காட்டு யானை தாக்கம் உட்பட வனவிலக்குகளின் பாதிப்புகளைத் தவிர்க்க முற்படுவதாக இருந்தால் வன விலங்குகளை அவற்றிற்கான வனாந்தரம் மற்றும் அவற்றிற்கான மேய்சல் தரைகளுக்குள் வைத்து பாதுகாப்பதுடன் அவை அத்துமீறி மக்கள் வாழ்விடங்களுக்குள் செல்லாதிருக்கும் வகையில் வனப் பிரதேசத்தைச் சூழ மின்சார வேலி முதலான தடைகளை ஏற்படுத்த வேண்டுமே தவிர அது அல்லாமல் வனவிலங்குத் தொல்லையில் இருந்து பாதுகாப்பு என்ற தோரணையில் மக்கள்வாழ்விடத்தைச்சுற்றி வேலியமைப்பதால்
அந்த வேலிக்கப்பால் உள்ள பகுதிகளை மறைமுகமாக வனவிலங்குகளின் மேச்சல்தரையாக இயல்பாக நாமே ஏற்றுக்கொள்கிறோம்
இதன்காரணமாக எதிர்காலத்தில் அப்பிரதேசங்களில் மக்களின் பரம்பலே ஏற்படாமல் மக்களை இங்கு திறந்தவெளி வேலிச் சிறைக்குள் அடைக்க சிலர் துனைபோகும் முட்டாள் தனத்தை ஏற்றுக்கொள்ளும் மடமையில் மக்கள் இல்லை என்பதை இத்தகைய தீர்மானம் எடுத்த மேதாவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.