Advertisement

Main Ad

மடவளை மதீனா பாடசாலையின் மைதானத்தினை அபிவிருத்தி செய்ய பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை!


மடவளை மதீனா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை பார்வையிடுவதற்காக திங்கட்கிழமை (07) விஜயம் செய்த பிரதி அமைச்சர், மைதானத்தின் குறைபாடுகளை நேரில் பார்வையிட்டதுடன் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இதனைத் தொடர்;ந்து இம்மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதி அமைச்சர் ஹரீஸூக்கும், பாடசாலை அதிபர் தலைமையிலான குழுவினருக்குமிடையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மைதான அபிவிருத்திக்கு அடுத்த வருட ஜனவரியில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அபிவிருத்தி செய்துதருவதாக பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உறுதியளித்தார்.