பல சிலிண்டர்கள் ஒன்றாக வெடித்ததில் சுமார் 2,000 சேரி வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக இந்திய அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
மும்பாயின் கண்டிவாலி கிழக்கு பகுதியிலுள்ள தமு நகர் சேரியில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற சிலிண்டர் வெடிப்பின் காரணமாகவே இத் தீ விபத்து அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 25 சிலிண்டர்கள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இவ்விபத்தின் காரணமாக காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அப்பகுதியில் வசித்த வந்த ஆயிரக்கணக்கானோர், தாங்கள் வசித்து வந்த வீடுகளை இழந்துள்ளதோடு, அப்பகுதி மக்கள் ஆழ்ந்த கவலையில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.