கடந்த வாரம் வாசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கமைய லிட்ரோ சமயல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இன்று (23) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலைகள் குறைக்கப்படுவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வீட்டு பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை வருமாறு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் - ரூபா 1,346
5 கிலோகிராம் - ரூபா 572
2.5 கிலோகிராம் - ரூபா 273