Advertisement

Main Ad

சம்மாந்துறை பிரதேசத்தில் விவசாயிகள் யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்த காவலாளிகள்

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் வேளாண்மை செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (25) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
 
சம்மாந்துறை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வட்ட விதானைமார்கள், வன ஜீவராசி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன்போது பிரதேசத்தில் நுழையும் யானைகளை விரட்டுவதற்கு காவலாளிகள் 10 பேர்களை நியமிப்பதற்கும், அவர்கள் அந்த பிரதேசத்திலுள்ள வட்டவிதானைமார்களுடனும், பிரதேச விவசாய குழுக்களுடனும் இணைந்து யானைகளின் ஊடுருவலை தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அத்துடன்  காவலாளிகளுக்கான சம்பளம் விவசாயிகளிடம் அறவிடப்பட்டு வழங்குவதற்கும், இதனை கட்டுப்படுத்த 51 பேர்களை கொண்ட பொது சபை நடவடிக்கை மேற்கொள்வுதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதவேளை பிரதேச விவசாயிகள் கடந்த காலங்களில்  எதிர்நோக்கும் பிராச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.