வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐ.நா விசாரணைப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தென்கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனமும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று (04) பல்கலைக் கழகத்தின் ஒலுவில் வளாக முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள் பிரதான வீதியில் பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.