Advertisement

Main Ad

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை குப்பை கொட்டும் இடத்தினை துப்புரவு செய்யாமை தொடர்பில் மக்கள் விஷனம் : நடவடிக்கை எடுக்கப்படுமா?


சென்ற 2015.10.29ஆந்திகதி (புதன்கிழைமை) ”வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் குப்பை கூழங்கள் மற்றும் யானைகளின் அட்டகாசம்” எனும் தலைப்பில் ஒரு செய்தி பல இணையத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் பிரசுரமாகியிருந்தது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காரமுனைக் கிராமத்திற்குச் செல்லும் மியான்குள காரைமடு வீதியில் கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளினால் அப்பகுதியில் நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பை கூழங்களினால் யானைகளின் அட்டகாசம் மிக அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதோடு, ஒரு உயிர் பலியாகியமையும், யாவரும் அறிந்திருப்போம்.

இது விடயமாக, செங்கலடி நீர்ப்பாசனத் திணைக்களம், கிழக்கு மாகாண பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம், காரமுனை விவசாய அமைப்பு மற்றும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் ஆகியன மேற்கொண்ட முயற்சியினால் கடந்த 2015.11.05ஆந்திகதி (வியாழக்கிழமை) தொடக்கம் இவ்வீதியிலுள்ள குப்பை கூழங்களையும் அடர்ந்து காணப்படும் பற்றைக்காடுகளையும் துப்பரவு செய்யும் பணி கோறளைப்பற்று பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது ஒரு பாராட்டத்தக்க விடயமாகும்.

ஆனால், இப்பிரதேசத்தில் மேலே குறிப்பிட்ட இரு பிரதேச சபைகளினாலும் நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பைகளை கோறளைப்பற்று பிரதேச சபை மாத்திரம் இவ்வீதியினைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையானது இவ்விடயத்தில் கவனம் செலுத்தாமைக்கான காரணம் என்னவென்று பொது மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையானது, இன்று வரை அவ்விடத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு காட்டும் ஆர்வம் அதனை உரிய முறையில் கோறளைப்பற்று பிரதேச சபையுடன் இணைந்து துப்பரவு செய்து பொது மக்களை பாதிக்காத வண்ணம் உரிய முறையில் குப்பை கூழங்களைக் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்னவென்று பொது மக்கள் அங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கோறளைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்களிடம் கேள்விகளைத் தொடுத்து வருகின்றனர்.

இது விடயமாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை பொது மக்களின் கேள்விகளுக்கும், இனி மேலும், இது விடயத்தில் அமைதி காக்காது உரிய நடவடிக்கை எடுக்குமா..?

கோறளைப்பற்று பிரதேச சபையினால் சுத்தம் செய்யப்படும் காட்சிகள்...