Advertisement

Main Ad

பாதை மாறிப் பயணிக்கிறதா நல்லாட்சி அரசு

முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஒத்து மந்திரங்கள் ஓதிய பல கட்சிகள் இன்று ஒவ்வொன்றும் நல்லாட்சி அரசுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், மறுபக்கத்தில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டு நல்லாட்சி அரசுக்கு தலைவலியைக் கொடுத்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்த அதே தவறுகளை இந்த நல்லாட்சி அரசும் செய்யக் கூடாது என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தன்னுடைய அமைச்சில் தன்னால் பெயர் முன்மொழியப்பட்டுள்ள ஒரு அதிகாரியைக் கூட நியமிக்க முடியாது. ஆங்கு சர்வாதிகார போக்கு கடைப்பிடிக்கப்படுவதாகவும்  இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.

நல்லாட்சி அரசில் அமைச்சர்கள் , இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைசச்ர்கள் மற்றும் பதவிகள் எதுவுமே கிடைக்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லாட்சி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் நலல்hட்சி அரசில் விரிசல்களை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் அணியினர் அரசுடன் முரண்படும் உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கும் நோக்கில் செயற்பட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைவரும் ஒன்றினைந்து நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க தஹ்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியினர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை இந்த அரசாங்கத்தை எவராலும் எதுவும் செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையையையும், நல்லாட்சியோடு முரண்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைசச்ர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் புரிந்துnhகள்ள முடியாது மக்களுக் குழப்புங்கள் ஏற்பட்டிருக்கிறது.

எனவே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை இந்த நல்லாட்சி அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
நாட்டில் நலல்hட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்பியவர்கள் இன்று அந்த நல்லாட்சி மீது வெறுப்படைந்தே தமது கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சுக்கள் மற்றும் அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் சர்வாதிகாரப் போக்கு கடைபிடிக்கப்பட்டதாக அன்று பல உறுப்பினர்கள் முரண்பட்டுக்கொண்டிருந்தனர்.

இவ்வாறு அரசு மீது அதிருப்த்தி அடையும் அமைச்சர்கள் உடனடியாக அந்த கொடுக்கப்பட்ட அமைச்சு பறிக்கப்படுவது அல்லது அதிகாரங்கள் குறைக்கப்படுவதும் அன்றை அரசில் மிகவும் சர்வ சாதாரனமாகவே இடம்பெற்று வந்தது.

இதனால்தான் குடும்ப ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி என்று அப்போதைய உறுப்பினர்களும், அமைச்சர்களும் மஹிந்த அரசுடன் முரண்பட்டுக்கொண்டிருந்ததன் விளைவுதான் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சித்ததாகும். ஆதன் பயனையும் பெற்றிருக்கிறார்கள்.

இவ்வாறு பெற்ற வெற்றியைக் கொண்டு எதை எதிர்பார்த்து இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியிருந்தார்களோ அந்த எதிர்பார்ப்பு நல்லாட்சி அரசில் கூட கிடைக்கவில்லை என்பதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாணியில் இந்த நல்லாட்சி அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகமும் தற்போதைய அரசியல் மட்டங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதமும் இதனையே குறிப்பிட்டுக்காட்டுகிறது.

இதற்கிடையில், தகுதியில்லாதவர்கள் அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்து வருகிறார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சாதாரனமாக ஒரு சிற்றூழியர் நியமனத்தைக் கூட பெறுவதற்கு தகுதியில்லாதவர்களும் அமைச்சரவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன், முன்னாள் அமைச்சராக இருந்த திலக் மரப்பன ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வற்புறுத்தலினால்தான் பதவியை இராஜினாமா செய்து கொண்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் முன்னைய அரசில் ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாகக் குறிப்பிட்ட நல்லாட்சி அரசு இன்று அந்த ஊழல் செய்தவர்களை காப்பாற்றிக் கொண்டிருப்பதாகவும் அனைத்து தரப்பினர்களாலும் ஒரு குற்றமாக சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படி ஒவ்வொரு கட்சிகளின் உறுப்பினர்களும் மாறி மாறி நல்லாட்சி அரசு மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுடன், ஐக்கிய தேசியக்கட்சி , சுதந்திரக்கட்சி கூட்டணிக் அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கமிடையே அடிக்கடி முரண்பாடுகள் வலுப்பெறுகிறது.

அதுமாத்திரமின்றி, மிக நிண்ட காலமாக நான்கு சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் நல்லாட்சி அரசு ஏமாற்றத்தை கொடுப்பதாகவும், கொடுத்த  வாக்குறுதிகளை மீறிச் செயற்படுவதாகவும் நல்லாட்சி அரசுக்கு கைகொடுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பும் குற்றம் சுமத்தியுள்ளது.

அதுபோல தமது சொந்த நாட்டுக்குள்ளே 25 வருடங்களாக அதகி வாழ்க்கை வாழ்ந்து வரும் வடக்க முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும் நல்லாட்சி அரசு தாமதிக்கிறது என்ற குற்றச்சாட்டும் ஒரு பக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, முஸ்லிம் அரசியல்வாதிகளின் விடயத்திலும் நல்லாட்சி அரசின் கவனம் மிகவும் குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் செய்த பணிகளைப் போல தற்போது செயற்பட முடியவில்லை என ஒரு சிறுபான்மை அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்.

நல்லாட்சியின் மீது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கட்சிகள் வெறுப்படைந்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற பல மாற்றுக்கருத்துக்களைக் கொண்ட அணியினர் பிரிந்து நின்றார்கள்.

இன்னும் சிலர் தங்களுக்கு நடக்கும் அநியாயங்களை மனதுக்குள் மாத்திரம் வைத்திருந்தனரே தவிர பகிரங்கமாக ஊடகங்களுக்கு முன்னால் வந்து கருத்துக்கள் எதனையும் கூறியது வரலாறுகள் கிடையாது.

ஆனால் இன்று நல்லாட்சி அரசில் யாரின் தலையீடுகளுமின்றி, யாருக்கும் அச்சமின்றி, அமைச்சர்கள் ஊடகங்கள் வாயிலாக சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். இவற்றில்தான் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறதே தவிர, வேறெந்த விடயங்களிலும் அதக் காணவில்லை என்பதையே எல்லோரும் குறிப்பிடுகிறார்கள்.

எனவே, இன்னும் 4ஆண்டுகளுக்கு இந்த நல்லாட்சி அரசை ஜனாதிபதி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதற்கு அப்பால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும் நல்லாட்சி மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விரைந்து செயற்படுத்துவதுடன், தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையையும் மிகவும் கச்சிதமாக கையாளவும் வேண்டும் அப்போதூன் நல்லாட்சி என்பதன் சொற்பதத்திற்கு நற்பெயரைப் பறெ;றுக்கொடுக்கும் என்பது யதார்த்தமாகும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.