திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி ஆப்கானில் ஒரு இளம் கல்லெறிந்து கொல்லப்பட்டுள்ளார்.
ஒரு குழியில் நிறுத்தப்பட்ட அந்தப் பெண், தலைப்பாகை அணிந்த ஆண்களால் கல்லெறிந்து கொல்லப்படும் 30 நிமிட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
19 முதல் 21 வயதுக்குள் இருக்கக்கூடிய ருக்ஷானா என்ற அந்தப் பெண் தனது குடும்பத்தவர் நிச்சயித்த மாப்பிள்ளையை நிராகரித்து, தான் விரும்பியவருடன் திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.
அதனையடுத்து, தனது காதலருடன் அவர் திருமணத்துக்கு முன்னதாக உடலுறவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, கல்லெறிந்து கொல்லப்பட்டிருக்கிறார்.
ஆனால், அவரது காதலருக்கு வெறுமனே கசையடி மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபிரோஷொக் என்னும் இடத்துக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக டோலோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் மீது கல்லெறிந்து கொலை செய்யும் போது அவர் தனது மத வாசகங்களை கூறி அலறுவதும் அந்த வீடியோவில் கேட்டதாக கூறப்பட்டிருக்கிறது.