இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு கல்லால் எறிந்து கொல்லுமாறு வழங்கிய தீர்ப்பை குறைக்குமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.
விபச்சாரத்தில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டதை அடுத்து இலங்கை பணிப்பெண்ணுக்கு இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
றியாத்திலுள்ள இலங்கை தூதுவராலயம், இது குறித்து சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணுக்கு மிகக் கூடிய அளவில் எவ்வாறான மன்னிப்பை வழங்கமுடியுமோ அதனை மேற்கொள்ளுமாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவரை விடுவிப்பதற்கான, உச்சபட்ச நடவடிக்கையை எடுப்பதற்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, றியாத்திலுள்ள இலங்கை தூதுவராலயம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன முயற்சி செய்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.