காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது கோவை முகாமைத்துவம் தொடர்பாக சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளர் பி.மோகன், ஜப்பானிய 5 எஸ் தொடர்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.ரமணீதரன், மக்கள் பட்டயம் தொடர்பாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகா கிருபைராஜா மற்றும் சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எம்.எம்.சபீர் ஆகியோர்கள் விரிவுரைகளை வழங்கினர்.
காரைதீவு பிரதேச செயலக உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.பாஹிஸா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச திணைக்களங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.