நியூயோர்க்கைச் சேர்ந்த 60 வயதான மேரி கேர்ஸ்டிங் எனும் பெண்ணுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பெண்ணின் தயார் தனது 93 ஆவது வயதில் 2013 ஒக்டோபர் மாதம் காலமானார்.
ஆனால், அவர் இறந்ததை மேரி கேர்ஸ்டிங் அறிவிக்காமல் வீட்டுக்குள்ளேயே சடலத்தை ஒளித்துவைத்துவிட்டு தனது தாயார் உயிருடன் இருப்பதாக கூறிவந்தார்.
தாயாரின் ஓய்வூதியப் பணம் மற்றும் அரச கொடுப்பனவுகளை தான் பெற்றுக்கொள்வதற்காகவே தனது தாயார் இறந்ததை மேரி கேர்ஸ்டிங் அறிவிக்கவில்லை என அதிகாரிகள் குற்றம் சுமத்தினர்.
இறுதியாக 2014 டிசெம்பர் 29 ஆம் திகதி அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட மேரி கேர்ஸ்டிங், தனது தாயார் இறந்துவிட்டதாக கூறினார். சடலத்தை ஆராய்ந்த அதிகாரிகள் உண்மையை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக மேரி கேர்ஸ்டிங்கிடம் விசாரித்தபோது, சடலத்தை அடக்கம் செய்வதற்கு தன்னிடம் பண வசதி இருக்கவில்லை எனக் கூறினார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம். மேரி கேர்ஸ்டிங்குக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்ததுடன் 500 மணித்தியாலங்கள் சமூகசேவையில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.