Advertisement

Main Ad

6ஆம் கொளனி, சாளம்பைக்கேணி-02, மிலேனியம் மகளிர் சங்கத்தின் நிர்வாக தெரிவு

6ஆம் கொளனி, சாளம்பைக்கேணி-02, மிலேனியம் மகளிர் சங்கத்தின் நிர்வாக தெரிவு கிராமசேவகர் கரியால வளாகத்தில் இன்று மாலை 6ஆம் கிராம சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் சாளம்பைக்கேணி-02 கிராமசேவகர் பீ.டீ.ஐயூப் தலைமையில் நடைபெற்றது.



இதில் நிர்வாக உறுப்பினர்களாக தலைவி ஏ.ஜனுபா, செயலாளர் கே.றிஸ்வானா, பொருளாளர் ஏ.எல்.பௌசியா வீவீ, உபதலைவி எம்.பரீனா, உபசெயலாளர் எஸ்.தர்ஸிலா, நிர்வாக உறுப்பினர்களாக ஏ.எல்.சரீனா, எம்.றூபியா, ஏ.பரீதா உம்மா, ஏ.எச்.கைறூன், ஏ.எல்.மரீனா, எஸ்.பர்ஸானா ஆகியோர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பீ.ஜெனீதா, நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி ஏ.எம்.கஸ்பியா வீவீ, பிரதேசத்திலுள்ள பெரும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.