மத்தியமுகாம் 4ஆம் கொளனி கடுக்காயன் பாலம் 24 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாலத்திற்கான இணைப்பு வீதியை புனர்நிர்மானம் செய்து தருமாறு விவாசயிகளும்இ பிரதேச வாசிகளும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வீதியினூடாக தற்போது விவசாயிகளும் பிரதேச மக்களும் பயணிக்கின்றனர்.
இவ் பாலம் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களின் நாவிதன்வெளி பிரதேச இணைப்புச் செயலாளர் எஸ்.எச்.அன்வரின் அயராத முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிர்மாணிப்பு வேலைகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிட்டதக்கது.
கடந்த காலங்களில் ஆற்றை கடந்து உர வகைகள் மற்றும் விளை பொருட்களை கொண்டு செல்வதற்கும்இ மத்தியமுகாம் பிரதேசத்திருந்து வீரச்சோலை கிராமத்திற்கு செல்வதற்கும் சிரமப்பட்ட விவசாயிகளும்இ பொது மக்களும் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டதன் காரணமாக தற்போது சிரமமின்றி போக்குவரத்து செய்து வருகின்றனர்.
இப்பாலம் நிறைவு செய்யப்பட்ட போதிலும் இதற்குரிய இணைப்பு வீதி இன்னும் சீராக்கப்படவில்லையென விவாசயிகளும் பிரதேச வாசிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.