Advertisement

Main Ad

சிறுவர் துஷ்பிரயோகம்):- கேடுகெட்ட மனிதர்களின் ஆசைக்கு அளவே இல்லையா.



நாட்டில் அதி வேகமாக பரவிவரும் ஓர் புதிய நோய் போன்றுதான் தற்போது நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் பரவலாக நாடுமுவதும் அதிகரித்துக்கொண்டுவருகின்றது காலையில் எழுந்தவுடன் வானொலிகளிலும், பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் காது புளிக்கும் அளவுக்கும் கண் கரிக்கும் அளவுக்கு செய்திகளை பார்த்தும் கேட்கக்கூடியதாகயுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் எங்கையோ ஏதோ ஒரு இடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் நடந்துகொண்டுதான் வருகின்றது இதற்கு காரணம் நமது நாட்டில் வலுவான சட்ட நடவடிக்கை அமுலில் இல்லாததன் காரணம்தானென்பதை தெட்டத் தெளிவாக கூறமுடியும். இதுவொரு பக்கம் இருக்க கேடுகெட்ட மனிதர்களின் உள்ளங்களில் தோன்றும் அசிங்கமற்ற ஆசைகளுக்கு அளவே இல்லையா கேள்வியும் எழுந்துள்ளது.   


இன்று நமது பிரதேசங்களில்கூட எத்தனையோ சிறுவர் துஷ்பிரயோகம் நடந்துகொண்டேதான் இருக்கின்றது ஆனால் அவை அனைத்தும் வெளிவந்துவிட்டால் குடும்ப மானம், ஊர் மானம் அம்பலமாகிவிடுமென்ற பயத்தில் அனைத்து கெட்ட விடையங்களும் குழிதோண்டி புதைக்கப்படுக்கொண்டிருக்கின்றது.

இப்போதெல்லாம் பெற்றோர்கள் பருவமடைந்த பெண் பிள்ளைகளை  மட்டுமல்ல பருவமடையாத பெண் குழந்தைகளையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் ஏற்பட்டுள்ளது இதிலிருந்து தமது பெண் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள பெற்றோர்களாகிய நாமும் தீவிர முயற்சி எடுக்கவேண்டும் அதாவது உங்கள் பெண் குழந்தைகளை தனிமையில் ஆட்டோக்களில் பாடசாலைக்கு, மாலைநேர வகுப்புக்களுக்கு அனுப்புவது போன்ற விடையங்களில் நீங்கள் கவனம் செலுத்திக்கொள்ளவேண்டும்.