Advertisement

Main Ad

சட்டவிதிகளை மீறும் வகையில் ஒலி எழுப்பும் வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்கு

சட்டவிதிகளை மீறும் வகையில் ஒலி எழுப்பும் வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

ஒலி மாசடைதல் சட்டம் முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது அது நடைமுறையில் இல்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார் .
ஒலி எழுப்புவதற்கான எல்லையொன்று நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அது சாரதிகளால் மீறப்படுகின்றமை தற்போது அதிகம் பதிவாவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எதிர் வரும் காலங்களில் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
இந்த நடவடிக்கைகளை எதிர்வரும் 2 வாரங்களில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.