ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது போல வித்யாவிற்காக அமைக்கப்படும் என கூறப்பட்ட விசேட நீதிமன்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கந்தப்பளை அகரம் அறிவின் அரங்கம் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (01.10.2015) கந்தப்பளையில் நடைபெற்ற சிறுவர் தின விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலை 9.00 மணிக்கு கந்தப்பளை பிரதான வீதியில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலம்ஆரம்பமாகி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தை வந்தடைந்ததும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
புhடசாலை சிறுவர்களின் நடன நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றது.அத்துடன் 400 சிறார்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் குறைந்த வருமானமுடைய 3 பிள்ளைகளுக்கு தலா 1500.00 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கான புலமைப்பரிசில்களும்,பழ்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 3 பிள்ளைகளுக்கு தலா 2500.00 ரூபா வீதம் அவர்களின் பல்கழைக்கழக கல்வி நிறைவடையும்; வரை புலமைப்பரசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
இன்று எமது நாட்டில் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லையோ? ஏன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சர்வதேச சிறுவர் தினத்தில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது போல வித்யாவிற்காக அமைக்கப்படும் என கூறப்பட்ட விசேட நீதிமன்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் சிறுவர் தொடர்பான வழக்குகளை அதன் மூலம் முன்னெடுத்து குற்றவாளிகளாக காணப்படுகின்றவர்களுக்கு தண்டணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் எதிர்காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.சிறுவர்கள் என்பவர்கள் எமது எதிர்கால நாட்டின் தலைவர்கள் அவர்களை பாதுகாத்து நல்வழிப்படுத்தி இந்த நாட்டிற்கு கையளிக்க வேண்டும்.அண்மையில் உயிர் நீத்த சேயாவின் சம்பவம் உட்பட அனைத்து சிறுவர் குற்றங்களையும் அந்த விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விரைவாக அவற்றை தீர்த்துவைப்பதன் மூலம் சர்வதேச ரீதியாக எமது நாட்டிற்கு ஒரு நம்பிக்கையை எற்படுத்த கூடிய வாய்ப்பும் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.