Advertisement

Main Ad

அட்டனில் மண்சரிவு - 50ற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்வு...( படங்கள் )


17.10.2015 அன்று இரவு அட்டன் சமனலகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இரவு 8 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தினால் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவினால் எவருக்கும் காயங்களோ, உயிராபத்துக்களோ ஏற்படவில்லை. 

எனினும் இப்பகுதியில் உள்ள 15 வீடுகளில் உள்ள 50ற்கும் மேற்பட்டவர்களை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மலையகத்தில் காணப்பட்ட வரட்சியான காலநிலை மாறி தற்போது பிற்பகல் வேளையில், அதிகளவான மழை காணப்படும் நிலையில் நீர் பாய்தோடியதால் மண் இறுக்கம் குறைவடைந்து சீமெந்தால் பாதுகாப்பாக கட்டப்பட்ட வேலியையும் உடைந்துக்கொண்டு இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே பல தடவைகள் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.