வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமையைக் கண்டித்து ஊழியர்கள் இன்றும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடதாசி ஆலையில் இருந்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியபடியே கோறளை மத்தி பிரதேச செயலகம் வரை வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபரி;டம் கையளித்தனர்.
இதன்போது பிரதேச செயலாளர் மகஜரினை மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்திறக்கு சமர்ப்பிப்பதாக ஊழியர்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை இவ் ஊழியர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் மாhச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லையென்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் இவ் ஊழியர்களின் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு கூட வசதி வாய்ப்பின்றி மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தனர்.
தங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் அல்லது சுயவிருப்பில் அல்லது கட்டாய சுயவிருப்பில் தங்களை அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கைகள் விடுகின்றனர்.