செய்தி அனுப்புனர் - RINS

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவுக்கமைய ஆரம்பிக்கப்பட்ட சிறுநீரக நோய் தடுப்புத் திட்டத்திற்கு (KIND) இணையாக உருவாக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியத்தின் விளம்பரத் தூதுவர்களாக பிரபல கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் திலகரத்ன தில்ஷன் அவர்கள் இன்று (01) மாலை ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டனர்.
இந்த தேசிய திட்டத்தின் நினைவு புத்தகத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பின்னர் இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் இடையிலான இருபதுக்கு இருபது (20 - 20) கிரிக்கட் போட்டியின் இரண்டாவது போட்டியை பார்வையிடுவதற்கு கலந்துகொண்டார்.