Advertisement

Main Ad

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக, கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒரவரான ரவி ஜயவர்தன நியமிக்கப்பட உள்ளார்.


செய்தி அனுப்புனர் - அஸ்ரப் ஏ சமத்

லங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக, கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒரவரான ரவி ஜயவர்தன நியமிக்கப்பட உள்ளார். 


ரவி ஜயவர்தன நடப்பு விவகார நிகழ்ச்சிப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இதுவரை காலம் தலைவராக கடமையாற்றி வந்த சோமரட்ன திஸாநாயக்க அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார். ரவி ஜயவர்தன கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தையும் லாங்செயார் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பற்றிய பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். ரவி ஜயவர்தன, சில காலம் சிறைச்சாலை ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.