Advertisement

Main Ad

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்தவை நியமிப்பது தொடர்பில் ஆலோசனை



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுயாதீனமாக இயங்கவுள்ளதாக அறிவித்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக நியமிப்பது தொடர்பிலான கூட்டமே தற்போது நடைபெறுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் தற்போது கொழும்பில் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த திலங்க சுமதிபால மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பிந்திக்கிடைத்த தகவல்:
இதேவேளை  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுடைய கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.