Advertisement

Main Ad

நாகசேனை நகரத்தில் இருந்து ஹோல்புறூக் நகரத்திற்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது - மக்கள் விசனம்


(க.கிஷாந்தன்)


நாகசேனை நகரத்தில் இருந்து ஹோல்புறூக் நகரத்திற்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் பிரதேச மக்களும் போக்குவரத்து செய்வதில் பல இடர்களை சந்திப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு  மழைக்காலங்ளில் பாதையில் காணப்படும் குழிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால்  வாகனங்கள் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

இதன் காரனமாக சாரதிகள் வாகனங்களை செலுத்தமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இப்பாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புணரமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.