( அஸ்றப் ஏ சமத் )
நீங்களும்
இறைவனைத்தான் நம்புவது நானும் இறைவனை நம்புகின்றேன். அவன் உங்களது
செயல்களை பாா்த்துக் கொண்டு தான் இருக்கிறான். நீங்கள் கடந்த முறை என்னை
ஆதரிக்கவில்லை. உங்களுக்கு விடுதலைப்புலிகளின் செய்த கொடுமைகளுக்கு தீர்வு
கண்டு அவா்களை அழித்து முஸ்லீம் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை
ஏற்படுத்தித் தந்தேன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகவும் கடுமையான
தொனியில் கோபமாக ஒரு இரு வாா்த்தைகள் உரையாற்றினாா். இது இப்தாா் நிகழ்வு
இங்கு நான் அரசியல் பேச விரும்பவில்லை.
தெஹிவளை மேயரும்
தெஹிவளையில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பாராளுமன்றத் தோ்தலில்
போட்டியிடுபவருமான தனசிரி அமரசிங்க தனது வீட்டில் இப்தாா் நிகழ்வொன்றை
நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தாா். தெஹிவளையில் வாழும் பெரும் தொகையான
முஸ்லீம்கள் கலந் து கொண்டனா். முன்னாள் ஆளுனா் அலவி மொலான தெஹிவளை மாநகர
உறுப்பிணா் ஹமீட் ஆகியோரும் 500 போ் கொண்ட முஸ்லீம்களும் கலந்து கொண்டனா் .