Advertisement

Main Ad

புனித ரமழான் நோன்பு பெருநாளை கொண்டாட மலையகம் முழுவதும் மூஸ்லிம் மக்கள் தயார்...


(க.கிஷாந்தன்)

புனித ரமழான் நோன்பு பெருநாள் 18.07.2015 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் மூஸ்லிம் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாட தயாராகியுள்ளனர். நோன்பு பெருநாளை முன்னிட்டு 17.07.2015 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மூஸ்லிம் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர்.

மலையகத்தில் தற்போது சீரற்ற காலநிலை காணப்படுகின்ற போதிலும் மூஸ்லிம் மக்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்காக ஆயத்தமாகி இருக்கின்றமை குறிப்பிடதக்கது.