Advertisement

Main Ad

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து கொள்ள வேண்டியது மலையக மக்களுடைய கடமை - தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம்


(க.கிஷாந்தன்)

தற்போது தேர்தல் காலம் என்பதால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து கொள்ள வேண்டியது மலையக மக்களுடைய கடமை என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்றதேர்தல் குறித்து விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்…



நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இம்முறை தேர்தலில் 3 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்களை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு மலையகத்தை சார்ந்த ஒவ்வொரு வாக்காளர்களின் கையிலேயே தங்கியுள்ளது.

கடந்த காலங்களை போன்று முகவரி தெரியாதவர்களுக்கு வாக்களித்து ஏமாற்றமடையாமல் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் மலையக மக்களுடைய தேவைகளை உணர்வுடன் செய்பவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் வெற்றி பெற்ற பின் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக மலையக பகுதியில் வீடுகள் இல்லாதவர்களுக்கு 400 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவ்வீடுகள் வெகுவிரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அத்தோடு தோட்டத்தில் தற்போது தொழிலாளர்கள் மெதுவான பணி செய்து வருகின்றார்கள். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்திற்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் 5வது கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளது. அதுவரைக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுப்பார்களா அல்லது ஏமாற்றுவார்களா என்பதை பொருத்திருந்து பார்போம்.

அவ்வாறு பெற்றுக்கொடுக்காவிட்டால் மக்களை ஏமாற்றிய தொழிற்சங்கத்துக்கு எதிராக பேராடுவோம்.

தேர்தல் சூடுபிடித்திருப்பதால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுப்பது அரசியலாக பயன்படுத்தமால் மக்களை இனியும் பகடகாய்கள் என நினைத்து செயற்படாமல் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செய்றபட வேண்டும்.

தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களுடைய பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்தி வீடு அமைப்பு திட்டங்கள், காணி வழங்குவதல் போன்ற விடயங்களை மேற்கொண்டார். தற்போது பிரதமரை இன்னும் 5 வருடங்கள் இவருக்கு பிரதமர் பதவியை கொடுப்பதறகு நாங்கள் முன்நின்று செயற்பட வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.