( எம்.ரீ.எம்.பாரிஸ் )
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி பொது வேட்பாளராக நாளை 13.07.2015 திங்கட்கிழமை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனவின் புதிய அரசாங்கத்தின் முன்னாள் சமுா்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ்.அமீா் அலி வேட்பு மனு தாக்கல் செய்யவிருப்பதாக பிரதியமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நடை பெறவிருக்கும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பிரதியமைச்சா் அமீா் அலி போட்டியிடயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

