Advertisement

Main Ad

இந்த புனித ரமழானில் கொடுத்தாருக்கு குறைவில்லை உடனடியாக உதவி கோரும் ஏழைக் குடும்பம்.




வல்கமுவ, மல்வானையைச் சேர்ந்த ஏழை குடும்பஸ்தரான எம்.ஆர்.எம். சுலைமான் (வயது-44) என்பவர் கடந்த 2 வருடகாலமாக நுரையீரல் பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். (உடலில் ஒட்சிசன் குறைவடைதல்)
இவரது இந்நோயினை குணப்படுத்த பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பலரது உதவியினால் 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான இயந்திரம் மூலம் செயற்கையாக ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகிறது. இயந்திரத்தின் இயக்கம் மூலம் வாடகைக்கு இருந்துவரும் இவரது வீட்டில் மின்சார பட்டியல் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக வருவதனால் அதனை செலுத்துவதற்காக கடந்த 1 வருட காலமாக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். ஒட்சிசன் வழங்காவிட்டால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

மூன்றரை வயதுடைய எம்.எஸ்.ஸம்ஹா என்ற பெண் பிள்ளையுடன் வாழ்ந்து வரும் இவரது குடும்பத்தில் அன்றாட வாழ்கையை ஓட்டிச் செல்வதற்கு பெரும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகிறார்.

எனவே, கருணையுள்ளம் படைத்த தனவந்தர்கள், பொது அமைப்புக்கள் இவரது நிலையினை கருத்தில் கொண்டு தங்களால் முடியுமான உதவியினை இப்புனித ரமழான் காலத்தில் செய்ய முன்வருமாறு வேண்டிக்கொள்கின்றார்.

தனக்கு சொந்தமாக வங்கிக் கணக்கொன்று இல்லாமையினால் தனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தங்களது உதவியினை செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றார்.

தொடர்புகளுக்கு,

எம்.ஆர்.எம். சுலைமான்,
346/46/B/1,பெலங்காவத்தை,
வல்கமுவ,
மல்வானை
போன்- 0771931380