Advertisement

Main Ad

ஐ.தே.கட்சியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு முன்னனியின் கண்டி மாவட்ட ஒரே ஒருதமிழ் வேட்பாளர் வேலுகுமார் அவர்களின் தேர்தல் பிரசார கூட்டம்


( பா.திருஞானம் )

ஐ.தே.கட்சியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு முன்னனியின் கண்டி மாவட்ட ஒரே ஒருதமிழ் வேட்பாளர் வேலுகுமார் அவர்களின்  தேர்தல் பிரசார கூட்டம் புஸ்ஸல்லாவையில் நடைபெற்றபோது. மலையக மக்கள் முன்னனி, தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், ஐனநாயகமக்கள் முன்னனி,தொழிலாளர் தேசிய சங்கம்அகியவற்றின் அமைப்பாளர்கள்,தோட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டதை படங்களில் காணலாம்.


இங்கு உரையாற்றிய வேலுகுமார் அவர்கள்.

கண்டி மாவட்டத்தில் 20 வருடகாலமாக இல்லாமல் போனதமிழ் பாராளுமன்ற உருப்பினரையும் நிலுவையாக உள்ள அபிவிருத்தியையும்
இம்முறை நிவர்த்திசெய்வோம்

கண்டி மாவட்டதில் தொடர்ந்து 20 வருடகாலமாக தமிழ் பாராளுமன்ற உருப்பினர் ஒருவர் இன்மையால் தற்போது அபிவிருத்திகள் பாரிய பின்னடைவை நோக்கிச் சென்றுள்ளது.

அதனை நிவர்த்தி செய்யதற்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதை மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இந்த தேர்தலில் நான் ஐ.தே.கட்சியில் வெற்றிபெறும் அப்படியாயின் என் பின்னால் அமைச்சர் அந்தஸ்த்துள்ள பழனி திகாம்பரம்,கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்,அமைச்சர் அந்தஸ்த்துள்ள லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோரும் எனது தலைவர் மனோகணேசன் அவர்கள் அமைச்சர் அந்தஸ்த்துள்ள ஒரு அமைச்சராக என் பின் நிற்பர் அவர்கள் ஊடாகவும் எனது பாராளுமன்ற நுழைவு ஊடாகவும் கண்டி மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்க் கொள்ளமுடியும். அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தமிழ் உருப்பினர் ஒருவரைவெற்றியடைக் செய்ய வேண்டும்.


தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.. 

கண்டி மாவட்டத்தில் தமிழ் மொழிபேசும் மக்கள் ஒரு சுபீட்சமான நிலையிலும் நிமிர்ந்து வாழக் கூடிய நிலையிலும் நாங்கள் ஒரு சழூகமாக எழுந்து நிட்க்க கூடிய நிலையை உருவாக்க வேண்டும் அதற்கு நாம் ஒன்னினைய வேண்டும்.  எதிர்காலத்தில் இந் வரலாற்று மிக்க இந் நிலையை மாற்ற தமிழ் மக்கள் ஒன்றினைய வேண்டும்.

கண்டி மாவட்டத்தை பொருத்தவரையில் 165.000 தழிழ் மக்கள் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் கூறினாலும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது சுமார் 65.000பேர் மாத்திரமே அளிக்கப்ட்ட வாக்குகளாக காணப்படுகின்றது.  இதில் தமிழ் உருப்பினர் வெற்றியடைய வேண்டுமானால் அவர் 40.000 வாக்குகளுக்கு மேல் பெறவேண்டும்  இந் நிலையில் வாக்குகளை சிதறடிக்கமல் வெற்றிபெறக் கூடியவர்களுக்கு அளிக்கவேண்டும்.

இந்த நிலையை கண்டி மாவட்ட வாழ் மக்கள் இம்முறையும் செய்யதவரின் அது வரலாற்றுமிக்க தவறாக மாரிவிடும்.  இது எமது வருங்கால சந்ததினருக்கு நாம் செய்யும் பாரியது ரோகமாகும். இம் முறைஐ.தே.கட்சியின் வெற்றியும் எனது வெற்றியும் உருதிசெய்யப்பட்டுள்ளது அதற்கு உங்களின் ஆதரவு இன்றியமையாதது என்று கூறினார்