Advertisement

Main Ad

மஹிந்தவுக்கு எதிராக குருநாகலில் ஆர்ப்பாட்டம்... ஏன் வாங்க பார்க்கலாம்


செய்தி - MD.Lucias 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக குருநாகல் பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'நாட்டுக்கு வேண்டாம் என்றால் வடமேல் மாகாணத்துக்க எதற்கு?, வடமேல் மாகாணத்தை போதைப் பொருள் மாகாணமாக மாற்றுபவரை தடுப்போம், ஊழல்வாதிகளுக்கு உங்கள் விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம்" என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் கோசம் எழுப்பினர்.