( B.THIRUGNANAM – PUSSELLAWA PRUVINCIAL REPOTER )
பெருந் தோட்ட மக்களின் சம்பள பிரச்சனையை தேர்தலாக்க வேண்டாம் தேர்தல் முடிந்ததும் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் தீர்வு கல்வி இராஜாங்கஅமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்

பெருந் தோட்ட மக்களின் சம்பள பிரச்சனையை நடைபெரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெருவதற்கு தேர்தல் பிரச்சனையாக்க வேண்டாம். மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்களும் ஒன்றினைந்து பேச்சுவார்த்தையின் மூலம் இந்தபிரச்சனையை தீர்க்கமுடியும்.
தேர்தல் முடிந்ததும். ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் எமது தமிழ் முற்போக்கு முன்னனி மூலம் அரசாங்கத்துடன் கதைத்து அரசாங்கத்தின் தலையிட்டு மூலம் இப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கு நடைபெரும் தேர்தலில் தமிழ் முற்போக்கு முன்னனிபெரும் ஆசனங்கள் உருதுனையாக இருக்கும் என்று கூறுகின்றார். கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். நுவரெலியா நகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் பெரும் திறலானதோட்டமற்றும் நகரமக்கள் கலந்துக் கொண்டார்கள்.


