Advertisement

Main Ad

நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளிலும் சுயேச்சைகுழுக்களும் கட்டுப்பணம் செலுத்தினர்.. (photos )


( B.THIRUGNANAM – PUSSELLAWA PROVINCIAL REPOTER )

நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளிலும் சுயேச்சைகுழுக்களும் கட்டுப்பணம் செலுத்தினர்

நுவரெலியாமா வட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு; அரசியல் கட்சிகளிலும் சுயேச்சைகுழுக்களிலும் போட்டியிடுகின்றனர். இவர்களில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நுவரெலியாமாவட்டத்தில் உள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 534150 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சி,ஜக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு,மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயககட்சி, ஜனசெதபெரமுன, பெரடுகாமிசமாஜவாதி, ஒக்கோமவெசியோ ஒக்கோம ரஜவரு, எக்சத் லங்காபொதுஜன கட்சி,சமாஜவாதிச மானதாகட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, ஜனசெதபெரமுன,பொதுஜன பெரமுன, எக்சத், புதியசியல உறுமய ஆகிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை கழமிறக்கியுள்ளது.

இந்ததேர்தலில் மாகாண சபை உறுப்பினர்களும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரும் போட்டியிடுகின்றனர். கடந்த பொதுத் தேர்தலில் ஜக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பி.இராஜதுரை,ஆகியோர் இந்தமுறை ஜக்கியதேசிய கட்சியில் போட்டியிடுகின்றனர். கடந்ததேர்தலில் போட்டியிட்டதைப் போன்று இலங்கை தொழிலாளர்காங்கிரஸ் இம்முறையும் ,ஜக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துபோட்டியிடுகின்றனர். கடந்தமாகாண சபை தோதலில் ஜக்கியதேசியகட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பையாசதாசிவம் இம்முறை ஜக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்புபட்டியலில் போட்டியிடுகின்றார். அதேபோன்று கடந்தமாகாண சபை தேர்தலில் ஜக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.உதயகுமார் இம்முறை ஜக்கியதேசிய கட்சியின் பட்டியலில் போட்டியிடுகின்றார். ஜக்கிய தேசிய கட்சிசார்பாக 6 சிறுபான்மை உறுப்பினர்களும் ஜக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்புசார்பாக 5 சிறுபான்மை உறுப்பினர்களும் போட்டியிடுகின்றனர்.