Advertisement

Main Ad

100 நாள் வேலைத்திட்டத்தில் பல பணிகள் நிறைவேற்றம் - பிரதமர் ரணில்


(க.கிஷாந்தன்)




கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது போன பல பணிகளை 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹாலிஎல பிரதேசத்தில் 19.07.2015 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அநுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்தி மஹிந்த ராஜபக்ஷவை மேடையில் ஏற்றி புதிய தேர்தல் அறைகூவலை விடுத்துள்ளனர்.

'நாட்டிற்கு உயிர்கொடுப்போம்' என்ற தொனிப்பொருளில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த 10 வருடங்களாக மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்திற்கு உயிர்கொடுத்தார். நாட்டுமக்களுக்கு தாக்குதல் மேல் தாக்குதல் நடத்தினார்.

பின்னர் 3 வது முறையாகவும் ஜனாதிபதியாகும் ஆசையுடன் களமிறங்கினார்.

ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பான தேர்தல் பணிகளை மேற்கொண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம்.

பொதுமக்களுக்காகவே இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.