(எஸ்.அஷ்ரப்கான்)
தம்புள்ள பள்ளி சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அக்கட்சியின் தவிசாளர் கடிதம் எழுதுவதன் மூலம் அக்கட்சி கோமாளிகளின் கூடாரம் என்பதை காட்டுகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
தம்புள்ள பள்ளி விவகாரத்தை உடனடியாக தீர்த்து வைக்கும்படி நகர அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் தனது தலைவருக்கு தவிசாளர் பசீர் சேகு தாவுத் நேரடியாக சொல்ல வழி தெரியாது கடிதம் எழுதியிருப்பதன் மூலம் அக்கட்சியின் அதியுயர் உறுப்பினர்கள் கூட ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் தூரத்தில் இருந்து கொண்டு கடிதம் எழுதும் பகிடித்தனமான அரசியலை மு. கா செய்கிறது. 2012 ம்ஆண்டு தம்புள்ள விவகாரம் சூடு பிடித்த போது அதனை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை தேர்தலில் வென்ற போது அந்த வெற்றியை காட்டி முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க முணையாமல் வெறும் அமைச்சு பதவிகளுக்காக அரசிடம் ஒட்டிக்கொண்டது.
அந்த தேர்தலின் போது அமைச்சு பதவியை ராஜினாமா செய்த பஷீர் சேகு தாவுத், முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும் நிபந்தனையாக வைக்காமல் அமைச்சரவையின் அமைச்சராக ஆனார். அந்த தேர்தலில் மஹிந்த அரசுக்கெதிராக வாக்களிப்பதன் மூலம் அரசுக்கும், அரசோடு ஒட்டி சமூகத்தை காட்டிக்கொடுக்கும் ஹக்கீம், ரிசாத் கட்சிகளுக்கு எதிராகவும் கிழக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என பகிரங்கமாக உலமா கட்சி கோரியது. ஆனாலும் மக்கள் உசார் மடையர்களாகி ஏமாந்த கதைதான் இறுதியில் முடிந்தது.
அதே போல் 2015 ஜனாதிபதி தேர்தல் வரை இவரும் இவரது தலைவரும் மஹிந்தவின் அரசில் ஜால்ரா அடிக்கும் அமைச்சர்களாக இருந்தார்களே தவிர தம்புள்ள பள்ளி சம்பந்தமாகவோ வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவோ எதுவுpத காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கண்கெட்ட பின் திடீர் ஞானம் வந்து இப்போது கடிதம் எழுதுவதன் மூலம் தெரிகிறது.
கட்சியின் உயர்பீட உறுப்பினர் அதுவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமை சந்திக்க முடியாமல கடிதம் எழுதுகிறார் என்றால் மு. காவுக்கு வாக்களித்த சாமாண்ய கிழக்கு மக்களால் ஹக்கீமை நெருங்கவும் முடியாது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. நாம் முஸ்லிம் காங்கிரசை விமர்சிக்கும் போது ஏன் நேரடியாக ஹக்கீமுடன் பெசலாமே என எம்மை பார்த்து சொல்லும் பலருக்கு இப்போது யதார்த்தம் புரிந்திருக்கும் என எண்ணுகிறோம்.
தும்புள்ள பள்ளி பிரச்சினையில் அதனை வேறு இடம் மாற்றாமல் அதே இடத்தில் இருக்க விடவேண்டுமென்பதே உலமா கட்சியின் உறுதியான கோரிக்கையாகும் என முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.