யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு, கிழக்கில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் காணப்படுவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு, வெள்ளாவெளி, மண்டூர் பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற தூப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் சத்தியானந்தன் மதிசயனின் மண்டூர் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து அவர் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர்கள் சமூக சேவை உத்தியோகத்தருடன் சிறிதுநேரம் உரையாடிவிட்டு அதன் பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாவிதன்வெளி பிரசேத செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் மதிசயன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தொடர்ந்தும் ஆயுதக் கலாசாரம் காணப்படுவதற்கான காரணம் என்ன?
இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்புலத்திலுள்ளவர்கள் யார்?