Advertisement

Main Ad

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் பலருக்கு பொது மன்னிப்பு

 Bella Dalima

இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அபராதத்தை செலுத்த முடியாதுள்ள கைதிகள் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கே பொது மன்னிப்பு கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திர ரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர சிறைச்சாலைகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அனைத்து கைதிகளுக்கும் ஒருவருட சிறை வாசத்திற்கு ஒருவாரம் என்ற அடிப்படையில் மனிப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தெரிவு செய்யப்பட்ட 30 விடயங்களுடன் தொடர்பில்லாத குற்றங்களை இழைத்த கைதிகளுக்கு மாத்திரமே நாளை பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்