Advertisement

Main Ad

வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடன் கெப் வாகனம் மோதியதில் நால்வர் பலி


Bella Dalima



ராகம – பட்டுவத்தை பகுதியில் கெப் வாகனமொன்று ரயிலுடன் மோதுண்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 

இந்த விபத்து காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தின் ஊடான ரயில் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது. 

வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடனேயே குறித்த கெப் வாகனம் சற்று முன்னர் மோதி விபத்திற்குள்ளானது.