2012-03-28ம் திகதி கடமை நேரத்தில் சபைக்குள் புகுந்து ரூபா 50ஆயிரம் பெறுமதியான கனணி மற்றும் தளபாடங்களை உடைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அக்கரைப்பற்றுப்பிரதேச சபையின் உப தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் அவர்களிடமிருந்து நஷ்டயீடு அறவிடப்படாமலும் குறித்த குற்றச் செயலுக்காக அவர் தண்டிக்கப்படாமலும் அக்கரைப்பற்று நீதிவான் நீதி மன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் சேதப்படுத்தப்பட்ட அரச பொதுவுடமைக்கான நியாயம் சபையில் தெளிவு படுத்தப்படாமல் தவிசாளர் எம்.ஏ.றாசீக் மற்றும் செயலாளர் ஏ.எல் சாலகுதீன் ஆகியோரினால் இக் குற்றச்செயல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் ஏதோ மர்மம் புதையுண்டிருப்பதாக நாம் சந்தேகப்படுகிறோம்.
எனவே இவ்விடயம் தொடர்பில் பிரதான முறைப்பாட்டாளரான சபையின் செயலாளர் ஏ.எல்.சலாகுதீன் அவர்களிடம் உரிய அதிகாரிகள் மீள் விசாரணையை மேற்கொண்டு 100நாள் வேலைத்திட்டத்தில் சேதப்படுத்தப்பட்ட அரச பொது உடமைகளுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென்றும் பொதுச் சொத்தை சேதப்படுத்திய குற்றவாளிக்கு தண்டனைவழங்கப்பட வேண்டுமென்றும் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
எச்.ஜே.எம்.இன்ஹாம்
எதிர்க்கட்சித் தலைவர்
பிரதேச சபை அக்கரைப்பற்று.