தலைமைத்துவ கிரிடமும் அமைச்சர் ஹக்கிமும்
மருதமுனை
மண்ணில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வழமை போல தனக்கே உரிய தலைமைத்துவ
பாணியில் இன்னும் 72 மணிநேரத்தில் கிழக்கு மண்ணின் முதல்வன் யார் என்கிற
முடிச்சை அவிழ்த்து எனது தலைமையிலான முஸ்லிம் காங்க்ரெஸ் அறிவிக்கும் என்று
கூறிவிட்டு சென்று அந்த 72 மணிநேரம் முடிந்தும் விட்டது. ஆனால் அந்த
முடிச்சை அவிழ்க்க முடியாமல் தவிக்கும் தலைமை எதனை இந்த மக்களுக்கு சொல்ல
வருகிறது? தலைவர் அஷ்ரஃப் வழியில் நடக்கும் தலைமை நான் என வார்த்தைக்கு 100
தடவை சொல்லும் தலமை தான் இதுவா என சந்தேகம் எழுகிறது. தேர்தல் காலத்து
வாக்குறுதிகளின் ராஜாவாக திகளும் இந்த தலைமை கிழக்கு மண்ணுக்கு தகுந்த
ஒருவரை நியமிக்க வேண்டிய கடமை பாடு இருந்தும் அதனை உரிய நேரத்தில் செய்ய
முடியாது
தவிப்பதன் மூலம் தனது தலைமைத்துவதை காப்பாத்த வேண்டிய இக்கட்டான
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நன்றாக தெரிகிறது. முஸ்லிம் மக்களின்
உரிமைக்குரல் என தம்பட்டம் அடிக்கின்ற சிரேஸ்ட முஸ்லிம் கட்சிகளில் ஒன்றான
இந்த கட்சி தனது கட்சியின் வளர்சியை மாத்திரமே கவனத்தில் கொள்கின்றமை
மறைக்கவோ மறுக்கவோ முடியாத ஒன்றாக உள்ளது. இந்த பதவியை புத்துனர்சி மிக்க
அரசங்கத்தை உருவாக்க வரலாற்று சாதனையான 90% வாக்குகளை அளித்து விட்டு
ஏமாளிகளாகவும்,துரதிஷ்டசாலிகளாகவும் வாழ்ந்து வருகின்ற கல்முனை
தொகுதிக்கு வழங்க முன்வரவேண்டும் என்கிற கோசம் ஆக்ரோஷமாக ஒலிக்க
ஆரம்பித்திரிக்கிறது. அதிகமான வாக்குகளை அளித்துவிட்டு பிரதியமைச்சாவது
கிடைக்காதா? எனும் ஏக்கமுடன் இருந்த இந்த மக்களுக்கு கடைசியில்
ஏமாற்றமே.....
தொடர்ந்தும் வரிசைபபடுத்த கூடிய அளவிற்கு
ஏமாற்றங்களை கொடுத்து வரும் இந்த தலைமை முதலமைச்சரையாவது இந்த தொகுதிக்கு
கொடுக்க அவசரமாக முன்வர வேண்டும். மலையேறிப்போன கனவுகலுடன் தலைவர்
அஷ்ரஃப்பின் புதிய வெளிச்சங்கள் பாட்டுக்கும் நாரே தக்பிருக்கும்
வாக்களித்த காலம் மலையேறிபோகிட்டு என்பதை மறக்க மாட்டீர்கள் என
நம்புகிறேன். தொடர்ந்தும் ஏமாற்றங்கள் இப்படியே செல்லுமாக இருந்தால்
கல்முனை எங்கள் வாக்கு வங்கி எனும் உங்கள் கனவுகள் பட்டுப் போகி உங்கள்
கல்முனை கோட்டையில் பாரிய ஓட்டை விழும் என்பது உலகறிந்த உண்மை. அம்பாரையை
நோக்கி படையெடுக்கும் சகல மக்கள் நல கட்சிகளும் கல்முனையை தளமாக கொண்டு
இயங்கும் மக்கள் நல அமைப்புக்களும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த
மறக்கவில்லை.
அம்பாரை மாவட்ட மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்.அதிலும்
கல்முனை தொகுதி உசார் நிலையில் இருப்பது உங்கள் கட்சிக்கு நன்றாக தெரிந்த
ஒன்றே. மக்களை நீங்கள் வழிகாட்டிய காலம் போய் மக்கள் உங்களுக்கு வழி காட்ட
ஆரம்பித்துள்ளார்கள்.அதன் வழியில் பயணிப்பது சகலருக்கும் நல்லது. மறுபக்கம்
பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாத உங்களை நம்பிய சம்மாந்துரை தொகுதியும்
உள்ளது,அதேபோல பொத்துவில் தொகுதியும் வேறு உள்ளது. உரலுக்கு ஒரு பக்கம்தான்
இடி ஆனால் உங்களுக்கு பல பக்கம்.காரணம் இரட்டை நாக்கு.போற இடமெல்லாம்
பிரதிநிததுவம் தருவதாக வாக்குறுதி அழிப்பதும்.ஆசை காட்டுவதுமே தவிர வேற
எதுவுமில்லை. எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு எடுப்பவருக்கே
அமைச்சு தருவதாக இப்போதே கூற ஆரம்பித்தால் அப்போது தலை காப்பாத்த படலாம்.
இந்த வேளையில் எங்கள் கட்சி தலைமையால் விடுக்க பட்ட சவாலை ஏற்று துரித
கதியில் சாய்ந்தமருது தோணா விடயத்தை செயலில் செய்து முடிப்பீர்கள் என
நம்புகிறேன்.
என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தேசிய கொள்கை பரப்பு
செயலாளர் அல்-ஹஜ் ஹுதா உமர் தெரிவித்தார்.