மியன்மாரின் 969 இயக்கத்தின் தலைவரான அசின் விராது தேரர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள யர் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளா கலகொட அத்தே ஞானசார தேரர், நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே மற்றும் தேசிய அமைப்பளார் உள்ளிட்ட பலர் விமான நிலையம் சென்று அசின் விராது தேரரை வரவேற்றனர்.
இதேவேளை, இலங்கை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினால் அதன் முலம் இங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. ஆகவே வன்முறைகளை தவிர்க்கும் பொருட்டு இவரை நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையிலேயே அவர் இன்று அதிகாலை கொழும்பை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.