Advertisement

Main Ad

ஊவா மாகாணத்தில் துளிரே விடாத இரட்டை இலை எவ்வாறு கருக இயலும்...??



(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

ஊவா மாகாணத்தில் இலங்கையின் மிகப் பெரிய முஸ்லிம் கட்சிகளின் தொடர் வரிசையில் உள்ள மு.கா, அ.இ.ம.கா ஆகியன இணைந்து தேர்தல் வேட்டைக்கு களமிறங்கி இருந்தன.முஸ்லிம் கட்சிகளின் இணைவு காலத்தின் தேவையாக இருந்த போதிலும்இஅரசாங்கத்திடம் முஸ்லிம்கள் வாக்கை அள்ளிச் சென்று காலில் குவிக்க உருவாக்கப்பட்ட கூட்டா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.தேர்தல் காலத்தின் போது அமைச்சர்  நிமல் சிறி பாலடி சில்வாவின் அரச அங்கீகாரத்துடனே முஸ்லிம் கூட்டு அமைக்கப்பட்டுள்ளது என்ற கூற்றும்இதேர்தலின் பிறகு அமைச்சர் சுசில் பிரேம சந்திர அரசாங்க வாக்கு வங்கி வீழ்ச்சியடைந்துள்ளது என்ற கருத்தை  புள்ளி விபரரதியாக   நலிவாக்க முஸ்லிம் கட்சிகளின் கூட்டு வாக்கை அரசாங்க வாக்கோடு இணைத்துக் கூறியுள்ளமையும்  இச் சந்தேகத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.மு.கா அரசாங்கத்தோடு இருந்தாலும் எதிர் கட்சி போன்றே இருக்கிறது என மு.கா கூறினாலும் இச் சந்தேகங்கள் மக்கள் உள்ளங்களில் உதித்து தாண்டவமாட இவ் இரு கட்சிகளும் அரச பங்காளிக் கட்சிகளாக இருப்பதே பிரதான காரணமாகும்.


அ.இ.ம.கா பொறுத்த மட்டில் ஊவா தேர்தல் அதற்கு இதுவே முதல் தடவை.மு.கா பொறுத்த மட்டில் அது எப்போதும்  தேர்தல்களின் போது தனது காலைப் பதித்திருக்கும்.கடந்த 2009 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது மு.கா ஆனது 4150 வாக்குகளை பெற்றிருந்தது.ஆனால் இம்முறை முஸ்லிம் கூட்டு 5045 வாக்குகளை பெற்றுள்ளது.இது 2009 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 21.56 வீதம் அதிகரிப்பு. முஸ்லிம் கூட்டு அமைக்கப் பட்டதன் நோக்கம் எதுவாக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதனையே நோக்கமாக கூறி இருந்தனர்.வாக்கு வங்கியில் 21.56 வீதம் அதிகரிப்பு இருந்த போதிலும் தனது நோக்கத்தில் தோல்வியைத் தழுவியது என்னவோ உண்மை தான்.

ஊவா மாகாண சபையை கைப்பற்றுவதே ஐ.தே.க இனது நோக்கம்.ஊவா மாகாண சபையை கைப் பற்றாது எதிர்க் கட்சி அந்தஸ்தை பெறுவதால் ஐ.தே.க  எதனையும் சாதிக்கப் போவதில்லை.அப்படியானால் ஐ.தே.க தனது நோக்கத்தில் வெற்றி கண்டதா?என்றால் "இல்லை" ஆனால் வளர்ச்சி கண்டுள்ளது. இதே நிலைமை தான் முஸ்லிம் கூட்டிற்கும்.

ஒரு ஐ.தே.க போராளி இற்கு  ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவு பொருந்திக் கொள்ளக் கூடியதாக அமையுமாக இருந்தால்இநிச்சயம் முஸ்லிம் கூட்டை ஆதரிப்போருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவு பொருந்திக் கொள்ளக் கூடியதே!

ஒரு காலத்தில் ஊவா மாகாண சபை ஐ.தே.க இனது கோட்டையாக காணப்பட்டது.அதிலும் குறிப்பாக பதுளை மாவட்டம்.இவ்வாறன இடங்களில் தனது சரிவை மீண்டும் நிவர்த்திப்பது ஒன்றும் ஐ.தே.க  பெரிய காரியமல்ல.ஆனால் மு.கா இற்கோ!முஸ்லிம் கூட்டிற்கோ!அவ்வாறல்ல.முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறுவது சாத்தியம் அற்றுக் காணப்பட்ட போதிலும் ஊவா வாழ் முஸ்லிம் மக்கள் பெரும் பான்மை இன கட்சிகளுக்கு வாக்களித்துப் பழக்கப் பட்டவர்கள்.

ஊவா மாகாண சபையின் வரலாற்றில் மறைந்த எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் காலத்தில் 1987 களில் அஷ்ரப் அவர்கள்இ காலம் சென்ற ஓசி அபேகுணசேகரஇ சானக்க அமரதுங்க ஆகியவர்களது சிங்கள கட்சியை இணைத்து போட்டியிட்டு பதுளையைச் சேர்ந்த ஜனாப் சித்திக் என்பவர் மாகாணசபை உறுப்பிணராக முஸ்லீம் காங்கிரசின்  ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன் பின்னர் கடந்த 27 வருடகாலமாக ஊவா மாகாணத்துக்கு இதுவரை ஒரு முஸ்லீம் மாகாணசபை உறுப்பிணரும் தெரிவாகவில்லை.

மர்ஹூம் அஸ்ரபை தலைவராக கொண்டு மிகவும் பலமிக்கதாக காணப்பட்ட மு.கா இனாலேயே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற முடியாதிருந்துள்ளதாக வரலாறுகள் எமக்கு கூறுகின்ற போது.அக் காலத்தில் மு.கா இற்கு இருந்த மக்கள் வாக்குப் பலம் மிகக் குன்றிக் காணப்படும் இக் காலத்தில் மு.கா இனால் "ஒரு ஆசனத்தையேனும் பெற முடிய வில்லையே!" என விமர்சிப்பது அறிவுடமையல்ல.

மு.காங்கிரசோ, அ.இ.ம.காங்கிரசோ மக்களால் புறந்தள்ளப் பட்டுள்ளது என நிறுவ ஊவா மாகாண சபை ஒரு பொருத்தமான இடமல்ல.அவர்கள் முஸ்லிம் கட்சிகளை இப்போதல்ல எப்போதும் ஏற்க வில்லை.

முஸ்லிம் கூட்டு  தனது நோக்கத்தை அடைவதில் ஊவா மாகான சபையில் தோல்வியை தழுவி உள்ளது என்பது எந்தளவு உண்மையோ அதை விட பல மடங்கு எந்த முஸ்லிமும் ஊவா மாகாண சபையில் வெற்றி அடையவில்லை என்பது உண்மை.எந்த கட்சியினூடாகவும் முஸ்லிம் உறுப்பினர் தெரிவாக வில்லை.முஸ்லிம்களினது வாக்குகள் முஸ்லிம் கூட்டிற்கு அளிக்கப்பட வில்லையே!ஐ.தே.க  கட்சிக்கே அதிக வாக்குகள் அளிக்கப் பட்டுள்ளது என  எந்த ஒரு முஸ்லிமாவது மகிழ்வுருவானாக இருந்தால் அவனை விட அறிவிலி உலகில் யாருமில்லை.எனினும், ஐ.தே.க இனது முஸ்லிம் வேட்பாளர் வெற்றி வைப்பின் சாதக தன்மையை குறைத்து விட்டதே!என ஒருவன் முஸ்லிம் கட்சிகளினது கூட்டினை குறை கூறுவானாக இருந்தால் அவரது சிந்தனைப் போக்கை ஓரளவு ஏற்கலாம்  ஆனால், உண்மைத் தன்மையை ஏற்க முடியாது.