Advertisement

Main Ad

அகில இலங்கை கிரிக்கட் சாம்பியன்களாக கல்முனை ஸாஹிரா. (இவர்களின் வெற்றி எங்கள் பிரதேசத்தின் வெற்றி)



பிரார்த்தனைகளுடன் கூடிய திறமை ஒரு போதும் வீண்போவதில்லை.
இலங்கை கிரிக்கட் கட்டுபாட்டு சபை , பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய 50 ஓவர் கொண்ட கடின பந்து தொடரில் கல்முனை ஸாஹிரா U/17 யாழ்ப்பாண மத்திய கல்லூரியை 4 விக்கட்டுகள் தோற்கடித்து தேசிய சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருப்பது நிச்சயம் எம் பிரதேசத்துக்கு பெருமை சேர்க்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை .

கல்முனை ஸாஹிரா அணியை எதிர்த்து போட்டியிட்ட தேசிய அணிகள் அனைத்திலும் பார்க்க போதிய விளையாட்டு வசதிகள் இல்லாத நிலையில் இலங்கையில் முதற்தர பாடசாலைகளை வீழ்த்தி இன்று சாம்பியன் ஆகியிருப்பது ஒரு சாதனை என்றால் மிகையாகாது.


இவர்கள் நிச்சயம் பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் . இந்த பெருமையை தக்க வைக்க இரவு பகலாக உழைத்த பயிற்றுவிப்பு ஆசிரியர் Aliyar Faizer , மேலும் இதற்காக உழைத்த அதிபர் , ஆசிரியர்கள் , பொருளாதார உதவிகளுக்கு தோளோடு நின்று உதவி செய்த அனைவரும் பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் ,

ஒரு பாடசாலையை பொறுத்தவரையில், கல்வியின் பெறுபேற்றில் மட்டும் பாராட்டி பெருமிதம் கொள்வதல்ல மாறாக அனைத்து துறை சார்ந்தவைகளையும் கவனத்தில் கொண்டு மாணவர்களை ஊக்கபடுத்த முன் வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் .
இந்த வெற்றி கல்முனை ஸாஹிராவில் கல்வித்துறையை மட்டும் முன் நிறுத்தி செயற்படும் ஒரு சில குறுகிய சிந்தனையுள்ள ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்.

வாழ்த்துக்களுடன் நன்றி ,
Sajath Cassim