(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
காலி,லபுதுல உயர் தொழில் நுட்ப பொறியியல் பிரிவு மாணவர்களினால் அம்பாறை மாவட்டம் பூராகவும் நடாத்தப்பட்டு வருகின்ற கணிதப் பாட இலவச கல்விக் கருத்தரங்கின் தொடர் வரிசையில் சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை(20-09-2014) காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை எதிர்பார்க்கை மாணவர்களின் எண்ணிக்கையையும் மிஞ்சி பிரதேச, இன வேறுபாடுகளுக்கு அப்பால் 522 மாணவர்களின் கலந்து கொள்ளலுடன் மிகவும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இவ் வழி காட்டல் கருத்தரங்கிற்கு விரிவுரையாளராக ஜெமீல் ஆசிரியர் அவர்கள் கலந்து மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.இக் கருத்தரங்கிற்கு பூரண அனுசரனை பிரபல சமூக சேவையாளரும், நபீர் பௌன்டேசன் அமைப்பின் தலைவருமான அல்-ஹாஜ் யூ.கே நபீர் அவர்கள் வழங்கினார்கள்.